Friday, July 3, 2009

முலைகள்


முலைகள் என்பது பருவமடைந்த பெண்களின் வளர்ச்சியடைந்த மார்பகம். பாலை சுரப்பது இதன் செயல் ஆகும். சிறுமிகளில் மார்பகங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருக்கின்றன, பின்னர் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. முலைகளின் வடிவங்கள் பல்வேறுபட்டவையாக அமைகின்றன. ஒவ்வொரு பெண்ணிற்கும் முலைகள் வேறுபடுகிறது. இதற்கு மரபியற் காரணிகளும், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களின் அளவும், நொதியங்களும் காரணமாக அமைகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் முலைகள் தளர்வடைகின்றன. மார்பகங்களின் அளவு, கருவுற்ற தடவைகள், உடல் நிறைச் சுட்டெண், புகை பிடித்தல், வயது என்பன இவை தளர்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

சில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிலிருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிலிருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிலிருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். கொங்கைகளில் சந்தன, குங்குமக் குழம்பு பூசியதாகத் தமிழ் இலக்கியம் பேசியதுண்டு. "வெறிக் குங்குமக் கொங்கை மீதே இளம்பிறை வெள்ளை நிலா எறிக்கும்' என்பது ஓர் எடுத்துக்காட்டு. நுங்குக் குரும்பை போன்றவை உண்டு. கெவுளி பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப் பெறும் செவ்விளநீர் எனக் கூறுவோருண்டு.
பெண்ணின் மார்பகம் பத்து அல்லது பதினோரு வயதில் வளர தொடங்கும். மார்புக் கூட்டின் மூன்றாவது விலாஎலும்பு முதல் ஆறாவது அல்லது எழாவது எலும்புவரை வியாபித்திருக்கும் தசைகோளங்கள்.பெண் பூப்படைவதர்குமுன் மெதுவாக வளரத் தொடங்கிய மார்பகம், பிறகு துரிதமாக வளர்கிறது. அந்த வளர்ச்சிக்கு காரணம்ஹோர்மோன்கள்.பெண்ணின் 18 வயதில் தற்காலிகமாக நின்றுவிடுகின்ற மரபாக வளர்ச்சி அவளுடையதிருமணத்திற்கு பிறகும், கருவுட்ற்ற நிலையிலும் மீண்டும் வளர்கிறது. மார்பகம் தனி உறுப்பு அல்ல. இதற்குகருபையுடன் தொடர்பு உள்ளது.